அமெரிக்கா சொல்வதை கேட்டு நடப்பவராக மோடி இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்

அமெரிக்காவின் உத்தரவுகளுக்கு பிரதமர் மோடி கீழ்ப்படிந்து செயல்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி
Published on

ஓமன் வளைகுடாவில் இந்திய மாலுமிகள் பயணித்துக் கொண்டிருந்த கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இந்தியா, அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் தனது எதிர்ப்பை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. எனினும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பதிவில், கூறியிருப்பதாவது: “அமெரிக்க தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்த நிலையில், அதற்காக அமெரிக்கா எந்த வருத்தத்தையோ மன்னிப்பையோ தெரிவிக்கவில்லை.

அதற்கு பதிலாக தொடர்ந்து உத்தரவுகளை மட்டுமே பிறப்பித்து வருகிறது. அமெரிக்க ராணுவத்தின் அறிவுறுத்தல்களுக்கு உடனடியாக கீழ்ப்படிய வேண்டும். எந்த விதமான மீறலும் ஏற்கப்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அவர்களின் வார்த்தைகளை கவனியுங்கள். சுதந்திரமான எந்த நாடும் இத்தகைய மொழியை ஏற்றுக்கொள்ளாது.

ஆனால் நமது பிரதமர் அமைதியாக இருக்கிறார். ஒரு கீழ்ப்படியும் பணியாளரைப் போல அவர்களின் உத்தரவுகளை ஏற்றுக்கொள்கிறார். சமரசத்திற்கு இடமளித்துள்ள பிரதமர் நாட்டின் கண்ணியத்தை பாதுகாக்க முடியாது. நாட்டை அவமதிப்பவர்களின் கட்டுப்பாட்டில் அவர் இருப்பதால் அதனை எதிர்த்து பேசுவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com