

புதுடெல்லி,
ரபேல் விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக சாடி வரும் ராகுல் காந்தி, தனது டுவிட்டரில் மோடியை விமர்சித்து மேலும் ஒரு பதிவை இன்று பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடியும், அம்பானியும் இணைந்து பாதுகாப்பு படை மீது சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியுள்ளனர். நமது வீரர்களின் தியாகத்தை அவமதித்து விட்டீர்கள் மோடி. உங்களை நினைத்து வெட்கப்படுகிறோம். இந்தியாவின் ஆன்மாவுக்கு துரோகம் இழைத்துவிட்டீர்கள் இவ்வாறு அவர் தெரிவித்தார்.