மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்: நவீன் பட்நாயக்கிடம் பிரதமர் மோடி உறுதி

ஒடிசா வளர்ச்சிக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று நவீன் பட்நாயக்கிடம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்: நவீன் பட்நாயக்கிடம் பிரதமர் மோடி உறுதி
Published on

புதுடெல்லி,

5-வது முறையாக தொடர்ந்து முதல் முந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்ட ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கிற்கு, பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். டுவிட்டரில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ஒடிசா முதல் மந்திரியாக பதவியேற்றுக்கொண்ட நவீன் பட்நாயக்கிற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய நவீன் பட்நாயக்கிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒடிசா வளர்ச்சிக்கு மத்திய அரசு முழுஒத்துழைப்பு அளிக்கும் என்று நான் உறுதி அளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com