

மும்பை
இப்போது அப்படியொரு சட்டமில்லை. எனினும் எங்களுக்கு இரண்டு ஆண்டுகள் உள்ளன. அதன் பிறகும் ஐந்தாண்டுகள் கிடைக்கும். எனவே நாடு முழுவும் பசு வதையை தடுக்க ஒரு சட்டத்தை மோடி அரசு கொண்டு வரும். இப்போது பொதுப்பட்டியலில் இவ்விஷயம் இடம் பெற்றிருக்கிறது என்றார் சுவாமி.
விராத் இந்து சங்கம் எனும் பெயர் கொண்ட தனது அமைப்பின் கூட்டத்தில் பேசும் போது சுப்ரமணியன் சுவாமி இவ்வாறு கூறினார்.
நாம் பசு மாட்டை காக்க வேண்டியிருப்பதில் பல்வேறு காரணங்கள் உள்ளன. பசு நமது கட்டுப்பாடற்ற சிந்தனையை பிரதிபலிக்கிறது. ஆகையால் பசுவை பாதுகாக்கும் நமது பொறுப்பு உறுதியாக உள்ளது என்றார்.
இக்கூட்டத்தை இந்திய பங்குச் சந்தையும், இஸ்கான் அமைப்பும் இணைந்து நடத்தின.
பசுக்களையோ, கோசாலைகளையோ பாதுகாக்க நிதிப் பற்றாக்குறை இருக்காது என்றார் அவர். பசுக்களை காப்பவர்களுக்கு சான்றிதழ் அளித்து அவர்களின் தகுதியை உயர்த்த வேண்டும் என்ற சுவாமி அவர்கள் சிறப்பான சேவையை அளித்து வருகின்றனர். இந்தியாவில் புதிய பசுப்பாதுகாவலர்கள் உருவாக்கப்படுவார்கள் என்றார்.
உச்ச நீதிமன்றம் மாட்டிறைச்சி உண்பது இஸ்லாத்தின் கட்டாயமான பிரிவில் இல்லை. எனவே மாட்டுக்கறி உண்ணக்கூடாது என்று சட்டமியற்றுவதை எதுவும் தடுக்கப்போவதில்லை என்றார் அவர்.
காங்கிரஸ் அரசு 13 விதமான மானியங்களை மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு வழங்கியிருந்தது. இப்போது அவை ஒன்றன் பின் ஒன்றாக நீக்கப்பட்டு வருவதால் மாட்டிறைச்சியின் ஏற்றுமதி குறைந்து விட்டது என்றார் சுவாமி.