

உஜ்ஜயின்,
பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டி, குஜராத் மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி, மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜயின் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மகாகாளஸ்வரர் கோவிலில் வழிபட்டார். உஜ்ஜயினில் உள்ள வேறு சில கோவில்களுக்கும் சென்று அவர் மோடிக்காக வேண்டிக்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மோடியின் சுனாமி அலை நாடு முழுவதும் வீசி வருகிறது. அவரால்தான் வலிமையான அரசை தர முடியும். வளர்ச்சியை முன்னெடுத்துச்செல்ல முடியும் என்றார்.