

புதுடெல்லி,
கொரோனா பரவல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சாவுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் நீண்ட காலமாக வரலாற்று, கலாசார தொடர்புகள் இருந்து வருவதாகவும், கொரோனாவால் தற்போது ஏற்பட்டுள்ள சவால்களை சந்திக்க இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அப்போது தாய்லாந்து பிரதமரிடம் மோடி கூறினார்.
இந்த தகவலை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார்.