'மோடி 3-வது முறை பிரதமராக பதவியேற்பது நமது நாட்டிற்கு கிடைத்த அதிர்ஷ்டம்' - சிவராஜ் சிங் சவுகான்

மோடி 3-வது முறை பிரதமராக பதவியேற்பது நமது நாட்டிற்கு கிடைத்த அதிர்ஷ்டம் என சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்
Modi Prime Minister fortune Shivraj Singh Chauhan
Published on

 புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்தியாவின் பிரதமராக 3-வது முறை மோடி மீண்டும் பதவியேற்க உள்ளார். அவரது பதவியேற்பு விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 7.15 மணிக்கு நடைபெறுகிறது.

இந்நிலையில் மோடி 3-வது முறை பிரதமராக பதவியேற்பது நமது நாட்டிற்கு கிடைத்த அதிர்ஷ்டம் என மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

"மோடி தொடர்ந்து 3-வது முறை பிரதமராக பதவியேற்க உள்ளது அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர் தனது வாழ்க்கையில் பல சாதனைகளை செய்துள்ளார். அந்த சாதனைகளில் இதுவும் ஒன்றாகும். தேர்ச்சி அடையும் மதிப்பெண்களை கூட பெறாதவர்கள், தேர்ச்சி அடைந்தவர்களைப் பார்த்து கேள்வி எழுப்புகிறார்கள். இந்தியாவின் பிரதமராக மோடி 3-வது முறை பதவியேற்பது நமது நாட்டிற்கு கிடைத்த அதிர்ஷ்டமாகும். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான நமது லட்சியம் விரைவில் நிறைவேறும்."

இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com