மோடியின் 4 ஆண்டு கால ஆட்சி: வங்கிகளில் ரூ.90 ஆயிரம் கோடி மோசடி; 23 பேர் தலைமறைவு - காங்கிரஸ் குற்றச்சாட்டு

மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் வங்கிகளில் ரூ.90 ஆயிரம் கோடி மோசடி மற்றும் 23 பேர் தலைமறைவாகி உள்ளதாகவும் காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது.
மோடியின் 4 ஆண்டு கால ஆட்சி: வங்கிகளில் ரூ.90 ஆயிரம் கோடி மோசடி; 23 பேர் தலைமறைவு - காங்கிரஸ் குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெய்வீர் ஷெர்கில் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மோடியின் கடந்த 4 ஆண்டு கால ஆட்சி காலத்தில் வங்கிகளில் ரூ.90 ஆயிரம் கோடி அளவிற்கு மோசடி நடந்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், 2014-15-ல் ரூ.19,455 கோடி, 2015-16-ல் ரூ.18,698 கோடி, 2016-17-ல் ரூ.23,933 கோடி, 2017-18-ல் 25,459 கோடி பணம் இந்திய வங்கிகளில் மோசடி செய்யப்பட்டு உள்ளது.

கடனை வாங்கிவிட்டு மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி உள்பட 23 பேர் நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டனர். அவர்கள் வெளிநாடு செல்ல சுற்றுலா ஏஜெண்டுகள் போல மோடி அரசு உதவி செய்து உள்ளது. இந்த அரசு சாதாரண மக்களை விட பெரும் பணக்காரர்களையும், தொழில் அதிபர்களையும் பாதுகாப்பதில்தான் அக்கறையுடன் இருக்கிறது. எனவே வங்கி மோசடி தொடர்பாக பாரபட்சம் இல்லாத விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com