சுவிட்சர்லாந்து நாட்டுக்கான இந்திய தூதராக மோனிகா கபில் நியமனம்

சுவிட்சர்லாந்து நாட்டுக்கான இந்திய தூதராக மோனிகா கபில் மோஹ்தா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டுக்கான இந்திய தூதராக மோனிகா கபில் நியமனம்
Published on

புதுடெல்லி,

சுவீடன் நாட்டுக்கான இந்திய தூதராக மோனிகா கபில் மோஹ்தா பணியாற்றி வருகிறார். லத்வியா நாட்டுக்கான தூதராகவும் உள்ள மோனிகா, இதற்கு முன் போலந்து மற்றும் லித்துவேனியா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கடந்த 2011ம் ஆண்டு ஜூலை முதல் ஜனவரி 2015ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மேற்கூறிய இரு நாடுகளின் இந்திய தூதராக இருந்துள்ளார்.

இதேபோன்று பிரான்ஸ், நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் பணியாற்றியுள்ள மோனிகா, பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் அமைந்துள்ள யுனெஸ்கோ அமைப்புக்கான இந்தியாவின் நிரந்தர குழுவிலும் பணிபுரிந்த அனுபவம் வாய்ந்தவர்.

இந்நிலையில், மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செயலாளர் அந்தஸ்தில் உள்ள மோனிகாவை, சுவிட்சர்லாந்து நாட்டுக்கான இந்திய தூதராக மத்திய அரசு நியமனம் செய்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com