இமாசலபிரதேசத்தில் மழைக்கு இதுவரை 43 பேர் பலி; 37 பேரை காணவில்லை

மழையால் வீடுகள், பாலங்கள், சாலைகள், டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்து உள்ளன.
இமாசலபிரதேசத்தில் மழைக்கு இதுவரை 43 பேர் பலி; 37 பேரை காணவில்லை
Published on

சிம்லா,

இமாசலபிரதேச மாநிலத்தில் ஜூன் 20-ந்தேதி முதல் பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மேகவெடிப்பு ஏற்பட்டு பல இடங்களில் அதி கனமழை பெய்தது. குறிப்பாக மண்டி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளன.

மாநிலம் முழுவதும் கடந்த 2 வாரங்களில் பெய்த மழைக்கு 43 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 14 பேர் மேகவெடிப்பு கனமழையில் இறந்துள்ளனர். 8 பேர் வெள்ளப்பெருக்கில் இழுத்துச் செல்லப்பட்டும், ஒருவர் நிலச்சரிவில் புதைந்தும், மேலும் 7 பேர் தண்ணீரில் மூழ்கியும் பலியாகி உள்ளனர்.

இந்த இறப்புகளில் மண்டி மாவட்டத்தில் மட்டும் 17 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாவட்டத்தில் மட்டும் 31 பேரும், மாநிலம் முழுவதும் இதர பகுதிகளில் 6 பேரும் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும்பணி நடந்து வருகிறது. மழையால் வீடுகள், பாலங்கள், சாலைகள், டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்து உள்ளன. ரூ.5 ஆயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டு இருப்பதாக மாநில அரசு மதிப்பீடு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com