

பெங்களூரு,
கர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என 7,000-க்கும் மேற்பட்டோருக்கு எச்.ஐ.வி. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி, வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் போதிய விழிப்புணர்வின்மை காரணமாக இளம் வயதினரிடையே எச்.ஐ.வி பரவல் அதிகரித்துள்ளதாக மாநில சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். வீட்டை விட்டு வெளியேறி கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களிடையே போதிய பாதுகாப்பு விழிப்புணர்வு இல்லாததால், சில குறிப்பிட்ட விடுதிகளில் அதிக அளவிலான எச்.ஐ.வி. தொற்று பரவியுள்ளது.
இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நோய்த்தொற்றை தடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்துக் | கல்லூரிகளிலும் சிறப்பு மருத்துவ மற்றும் பரிசோதனை முகாம்களை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், தனிநபர்களின் ஒப்புதல் இன்றி எந்தவொரு பரிசோதனைக்கும் இளைஞர்களை உட்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது எனவும் திட்டவட்டமாக கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது.