

புதுடெல்லி,
ரஷியாவில் வோல்காகிரேடு பகுதியில் உள்ள வோல்கா ஆற்றில் கடந்த 8-ந்தேதி குளிக்கச் சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 4 மாணவர்கள் நீரில் மூழ்கி பலியானார்கள். அவர்கள் வோல்காகிரேடு மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர்.
இதற்கிடையே, 4 மாணவர்களின் உடல்கள், அடுத்த வார தொடக்கத்தில் இந்தியா வந்து சேரும் என்று மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளிதரன் தெரிவித்தார். இதுதொடர்பாக, ரஷியாவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு பேசி இருப்பதாக அவர் கூறினார். பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொண்டுள்ளார்.