ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஷிபு சோரனின் உடல் இன்று தகனம்


ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஷிபு சோரனின் உடல் இன்று தகனம்
x

ஷிபு சோரன் மறைவையொட்டி ஜார்க்கண்ட்டில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரி ஷிபு சோரன் (வயது 81). இவர் 3 முறை ஜார்க்கண்ட் முதல்-மந்திரியாக செயல்பட்டுள்ளார். மேலும், மாநிலங்களவை எம்.பி.யாகவும் செயல்பட்டுள்ளார்.

ஷிபு சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனர் ஆவார். ஷிபு சோரன் தற்போதைய ஜார்க்கண்ட் முதல்-மந்திரியாக செயல்பட்டு வரும் ஹேமந்த் சோரனின் தந்தை ஆவார்.

இதனிடையே, கிட்னி தொடர்பான பிரச்சினை காரணமாக ஷிபு சோரன் ஜூன் 24 ம் தேதி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 1 மாதத்திற்குமேல் சிகிச்சை பெற்றுவந்த ஷிபு சோரன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவிற்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஷிபு சோரன் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், ஷிபு சோரனின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்பட உள்ளது. சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலம் ராம்ஹர் மாவட்டம் நிம்ரா கிராமத்தில் ஷிபு சோரனின் உடல் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.

இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்பட பல்வேறு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். ஷிபு சோரன் மறைவையொட்டி ஜார்க்கண்ட்டில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story