போனை வைத்துவிட்டு சாப்பிடு.. தாய் திட்டியதால் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

ஹேமா லோகண்டே சிறிய விஷயங்களுக்குகூட கோபப்படுவதாகவும், அளவுக்கு அதிகமாக மொபைல் போனைப் பயன்படுத்துவதாகவும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
போனை வைத்துவிட்டு சாப்பிடு.. தாய் திட்டியதால் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை
Published on

இந்தூர்,

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஹேமா லோகாண்டே. இவர் மொபைல் போனை அதிகம் பார்க்கும் பழக்கம் உடையவர்.

இதையடுத்து நேற்று வழக்கம்போல் அனைவரும் சாப்பிடும்போது ஹேமா மொபைல் போனை பார்த்துக்கொண்டிருந்தார். அதைப்பார்த்த ஹேமாவின் தாய், போனை வைத்துவிட்டு சாப்பிடு என்று கண்டித்திருக்கிறார்.

இதனால் கோபமடைந்த ஹேமா, மொபைல்போனை எடுத்துக்கொண்டு வீட்டின் மூன்றாவது மாடிக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிறுமியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மரணம் பற்றி விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஹேமா லோகண்டே சிறிய விஷயங்களுக்குகூட கோபப்படுவதாகவும், அளவுக்கு அதிகமாக மொபைல் போனைப் பயன்படுத்துவதாகவும், விசாரணையின்போது அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com