நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பிக்கள் நூதன போராட்டம்

மழைக்கால கூட்டத்தொடரின் 10 வது நாளான இன்றும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
 ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே அனல் பறந்து வருகிறது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரம், நீட் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் ராஜினமா செய்ய வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போரட்டத்தில் பாதுகப்பு படையினர் தாக்குதல் நடத்திய விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

உண்டியல்களில் பணம் போட்டு

மக்களவை கூடியதும் அமளி தொடர்ந்ததால், நண்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு பிரச்சினையை கவனத்திற்கு கொண்டு வரும் விதமாக, ராகுல் காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் உண்டியல்களில் பணம் போட்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். ராமர் கோவில் நன்கொடை முறைகேடு தொடர்பாக கையில் பேனர்களையும் கையில் வைத்து இருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com