

லக்னோ
தனது கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட இஃப்தார் விருந்தை புறக்கணித்த அவர், பிரதமர் மோடி பங்கேற்கும் விருந்தில் கலந்து கொண்டார். முதல்வர் ஆதித்யநாத் இந்த விருந்தை தனது இல்லத்தில் நடத்தினார். மோடி யோகா தினக் கொண்டாடங்களில் பங்கேற்க வந்துள்ளார்.
முலாயம் ஏற்கனவே ராம்நாத் கோவிந்துக்கு தனது ஆதரவை தெரிவித்துவிட்டார். பாஜக வேட்பாளர் தீவிரமான காவிச் சிந்தனைவுடையவராக இல்லாமலும், அனைவராலும் ஏற்றுக்கொள்ளபடத்தக்கவராகவும் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங்கும், வெங்கய்யா நாயுடுவும் முலாயமுடன் ஜூன் 16 அன்று தொலைபேசியில் பேசினர்.
முலாயமின் இக்கூற்று காங்கிரஸ் முன்னெடுக்கும் 17 கட்சி கூட்டணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. முலாயம் மகனும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வேட்பாளரையே ஆதரிக்க முடிவு செய்தார். ஜூன் 22 ஆம் தேதி கூட்டத்திலும் அவர் பங்கேற்கவுள்ளார். செவ்வாய் அன்று முலாயம் கோவிந்த்தை ஆதரித்து பேசியுள்ளார். பாஜக நல்ல வேட்பாளரை தேர்வு செய்துள்ளது. கோவிந்த்துடன் எனக்கு நீண்டகால தொடர்புண்டு. பாஜகவுக்கு தேவையான உறுப்பினர்கள் ஆதரவு உண்டு. அவர்களால் 1-5% ஆதரவையும் தேவைப்பட்டால் திரட்டிக்கொள்ள முடியும் என்றார் முலாயம். அதேசமயம் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் தேர்வு பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றார்.
இடதுசாரி மாணவர் அமைப்புகள்
பாஜக வேட்பாளருக்கு இடது சாரி மாணவர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஒருபுறம் தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகளை இழைத்துக்கொண்டு மறுபுறம் அம்பேத்கர் பெயரில் நூலகங்களை திறந்து கொண்டுள்ளனர். கோவிந்த் தலித் தலைவராக இருக்கலா; தலித் மக்களுக்கான தலைவராக அவர் இருக்க இயலாது. ஏனெனில் அவர் பாஜக, ஆர் எஸ் எஸ் சிந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளவராக இருக்கிறார் என்றார் தலித் இயக்கத் தலைவர் ஒருவர்.