முல்லைப்பெரியாறு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் கேரளா அரசு புதிய மனு..!

முல்லைப் பெரியாறு அணை வழக்கில் 2014-ம் ஆண்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு பணியை மேற்பார்வைக்குழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிடக் கோரிய ஜோ ஜோசப் மனு, கேரளத்துக்கும் தமிழகத்துக்கும் இடையிலான முல்லைப்பெரியாறு அணையின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி கொச்சியை சேர்ந்த சுரக்ஷா அறக்கட்டளை தாக்கல் செய்த மேல்முறையீடு மனு ஆகியவற்றை இணைத்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த ஜனவரி 11-ந் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டிய அம்சங்களை கண்டறிந்து, அவை குறித்து எழுத்துப்பூர்வமாக பிப்ரவரி 4-ந் தேதிக்குள் மனு தாக்கல் செய்ய தமிழகம், கேரளம், மனுதாரர்கள், இடையீட்டு மனுதாரர்களுக்கு அமர்வு உத்தரவிட்டது. மனுக்கள் மீதான விசாரணையை பிப்ரவரி 2-வது வாரத்துக்கு தள்ளி வைத்தது.

இந்நிலையில், இவ்விவகாரத்தில் விசாரிக்கப்பட வேண்டிய அம்சங்கள் தொடர்பாக கேரள அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், முல்லைப் பெரியாறு அணை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் 2014-ம் ஆண்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்; தேவைப்படும் பட்சத்தில் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com