முல்லைப் பெரியாறு அணை: மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு

முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரும் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

கேரளாவுக்கும், தமிழகத்துக்கும் இடையிலான முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி கொச்சியைச் சேர்ந்த சுரக்ஷா அறக்கட்டளை தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை நீரியல் ரீதியாகவும், நில அதிர்வுகளை தாங்கும் வகையிலும், கட்டுமான வகையிலும் வலுவாக உள்ளது என சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகளில் கூறப்பட்டுள்ளதையும் தமிழக அரசு மனுவில் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com