மும்பையில் மாடி வீடு இடிந்து விபத்து - 15 பேர் காயம்


மும்பையில் மாடி வீடு இடிந்து விபத்து - 15 பேர் காயம்
x

நேற்று அதிகாலை 5.56 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது.

மும்பை,

மும்பை பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் பாரத் நகர் குடிசை பகுதி உள்ளது. இங்கு சால் எண்-37 பகுதியில் நமாஜ் கமிட்டி மசூது அருகே 2 மாடிகள் கொண்ட குடிசை வீடு உள்ளது. இந்த வீடு நேற்று அதிகாலை 5.56 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது. அந்த வீடுகளில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி அபாய குரல் எழுப்பினர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தகவல் அறிந்து தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 15 பேரை மீட்டு ஆம்புலன்சு மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில், கீழ் தள வீட்டில் வசித்து வந்த ரெகானா அன்சாரி (வயது65), முகமது அன்சாரி(68) ஆகிய 2 பேர் பலத்த தீக்காயம் அடைந்து இருந்தனர். காயம் அடைந்தவர்கள் கே.இ.எம் ஆஸ்பத்திரிலும், பாபா ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் வீடு இடிந்து விழுந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ''இடிந்து விழுந்த வீடுகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

1 More update

Next Story