இமாச்சலபிரதேசம் திடீர் வெள்ளம்: 2 பேர் பலி

10 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
டேராடூன்,
மேகவெடிப்பு காரணமாக இமாச்சலபிரதேச மாநிலம் கங்ரா மற்றும் குல்லு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்தது. கனமழையால் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
இதையடுத்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் பேரிடம் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளப்பெருக்கால்ம் கங்ரா மாவட்டத்தில் உள்ள கன்யாரா கிராமம் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. மேகவெடிப்பால் கனமழையுடன், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story






