

மும்பை,
மும்பை அடுத்த திவா-மும்ரா இடையிலான பகுதியில் ரூ.2.2 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களுடன் 2 நைஜீரியர்களை போலீசார் கைது செய்தனர்.
மும்பையை அடுத்த திவா-மும்ரா இடையே போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் நவிமும்பை, மும்ரா போலீசார் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த அகுபா கென்னத் (வயது 45), சண்டே எசே(47) ஆகிய 2 பேரையும் பிடித்து சோதனை நடத்தினர்.
அதில் அவர்களிடமிருந்து சர்வதேச சந்தையில் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ எம்.டி. மற்றும் 316 கிராம் கொகைன் போதைப்பொருட்கள் மற்றும் 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 நைஜீரிய வாலிபர்களை கைது செய்தனர்.