மும்பையில் ஒரு மாதத்திற்கு பட்டாசு வெடிக்க தடை

மும்பை பெருநகர எல்லைக்குள் ராக்கெட் உள்பட எந்த வகையான பட்டாசுகளையும் வெடிக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் ஒரு மாதத்திற்கு பட்டாசு வெடிக்க தடை
Published on

மும்பை,

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த சூழலில், மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில் ஒரு மாதத்திற்கு பட்டாசு வெடிக்க தடை விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி மே 11-ந்தேதி(இன்று) முதல் ஜூன் 9-ந்தேதி வரை மும்பை பெருநகர எல்லைக்குள் ராக்கெட் உள்பட எந்த வகையான பட்டாசுகளையும் வெடிக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com