மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அரசு தரப்பு முடிவு


மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அரசு தரப்பு முடிவு
x

கடந்த 2006-ம் ஆண்டு மின்சார ரெயில்களை குறிவைத்து பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தினர்.

மும்பை

மும்பை ரெயில் தொடர் குண்டு வெடிப்பில் சிறப்பு கோர்ட்டால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் என அனைவரையும் விடுதலை செய்து ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.மும்பை ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் 12 பேரும் விடுவிக்கப்பட்டது குறித்து மந்திரி சந்திரசேகர் பவன்குலே கூறியதாவது:- 12 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யும் முன் தீர்ப்பை மாநில அரசு ஆய்வு செய்யும்.

அதற்கு முன் தீர்ப்பின் தன்மை, விடுதலைக்கான காரணம் குறித்து நாங்கள் ஆலோசிப்போம். முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் இந்த விவகாரத்தை ஆய்வு செய்வார். ஆய்வுக்கு பிறகு தான் மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யும். மாநில அரசிடம் கூடுதல் தகவல்கள் இருந்தால் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அதை விரிவாக கூறுவார். இவ்வாறு அவர் கூறினார்.

ஐகோர்ட்டு தீர்ப்பு குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் கூறுகையில், " நீதிமன்ற தீர்ப்பு துரதிருஷ்டவசமானது. இதன் மூலம் யார் குண்டு வைத்தது என்ற கேள்வி எழுகிறது. விசாரணை முகமைகளில் பணியில் பின்னடைவு இருந்து இருக்கலாம் என தெரிகிறது " என்றார்/ தேசியவாத காங்கிரசை சேர்ந்த மந்திரி சகன் புஜ்பால் கூறும்போது, " தீர்ப்பை மாநில அரசு ஆய்வு செய்யும். தேவைப்பட்டால் மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யலாம் " என்றார்.

1 More update

Next Story