மும்பையில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்காளதேசத்தினர் 2 பேர் கைது

மராட்டிய மாநிலம் மும்பையில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்காளதேசத்தினர் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பையில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்காளதேசத்தினர் 2 பேர் கைது
Published on

மும்பை,

வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடும்பமாக நுழையும் நபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாற்று பெயர், அடையாள அட்டையுடன் வசித்து வருகின்றனர். அந்த நபர்களை கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், மராட்டிய மாநிலத்தின் மும்பை பகுதியில் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக வசித்துவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் நகர போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து போலி ஆவணங்களும் மீட்கப்பட்டன. இதையடுத்து கைது செய்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, நேற்று மராட்டியத்தின் தானே பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 4 வங்காளதேச பெண்களை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com