கடந்த ஆண்டை விட மலேரியா, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு - மும்பை மாநகராட்சி


கடந்த ஆண்டை விட மலேரியா, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு - மும்பை மாநகராட்சி
x

கோப்புப்படம்

மும்பையில் கடந்த ஆண்டை விட மலேரியா, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மும்பை,

மும்பையில் பருவ மழைக்கால நோய்களான மலேரியா, டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில் அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் இரைப்பை குடல் அழற்சி நோய்கள் கடந்த 2 மாதங்களில் குறைந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து மும்பை மாநகராட்சி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 8 மாதத்தில் மும்பையில் 5,706 பேருக்கு மலேரியா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில் இந்த பாதிப்பு 4,021 ஆக இருந்தது. இதே காலகட்டத்தில் 1,979 ஆக இருந்த டெங்கு பாதிப்பு தற்போது 2,319 ஆக அதிகரித்துள்ளது. இதுபோல் 210 ஆக இருந்த சிக்குன்குனியா பாதிப்பு 485 ஆகவும் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 6,133 பேர் இரைப்பை குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது அது 5,774 ஆக குறைந்து உள்ளது.

நோய்க்கிருமிகளால் பரவும் நோய்கள் ஆகஸ்ட் மாதத்தில் உச்சத்தை எட்டும். ஆனால் இந்த ஆண்டு இரைப்பை குடல் அழற்சி வழக்குகளில் எந்த அதிகரிப்பும் காணப்படவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

1 More update

Next Story