மும்பை: பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 33 பெண்கள் மீட்பு

மும்பையில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 33 பெண்களை போலீசார் மீட்டுள்ளனர்.
மும்பை: பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 33 பெண்கள் மீட்பு
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் தெற்கு மும்பையின் கிர்ஹன் பகுதியில் பாலியல் தொழில் நடபதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கிர்ஹன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பாலியல் தொழில் நடப்பதும், 30-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் தொழிலில் தள்ளபட்டதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி தள்ளப்பட்ட 33 பெண்களை மீட்ட போலீசார், இடைத்தரகர்கள், வாடிக்கையாளர்கள் என 23 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com