புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக காதலனை வீட்டிற்கு அழைத்த இளம்பெண்.. அடுத்து நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி..!


புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக காதலனை வீட்டிற்கு அழைத்த இளம்பெண்.. அடுத்து நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி..!
x

இருவரும் வீட்டில் தனிமையில் இருந்தபோது, மீண்டும் திருமண பேச்சு எழுந்துள்ளது.

மும்பை,

மும்பையின் கிழக்கு சாண்டாகுரூஸில் புத்தாண்டு தினத்தன்று, 25 வயது இளம் பெண் ஒருவர் தனது காதலனை அழைத்து, பின்னர் கத்தியால் தாக்கியதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் சாந்தாகுரூஸ் கிழக்கு, கலினா பகுதியில் உள்ள ஜம்லிபாடா எனும் இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட 42 வயது நபரும், 25 வயது பெண்ணும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அந்தப்பெண் நீண்ட நாட்களாக திருமணம் செய்துகொள்ளுமாறு காதலனை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், ஒவ்வொரு முறையும் அந்த நபர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அந்தப்பெண் தனது வீட்டுக்கு வருமாறு காதலனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதனை ஏற்று காதலனும் சென்றுள்ளார். இருவரும் வீட்டில் தனிமையில் இருந்தபோது, மீண்டும் திருமண பேச்சு எழுந்துள்ளது. அப்போதும் அவர் மறுக்கவே, ஆத்திரமடைந்த அந்தப்பெண் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து காதலனின் மர்ம உறுப்பை துண்டித்துள்ளார்.

படுகாயமடைந்த அந்த நபர், வலியால் துடித்த நிலையிலும் அந்த பெண்ணிடமிருந்து தப்பித்து, உடனடியாக தனது சகோதரருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவரது சகோதரர் விரைந்து வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக வி.என்.தேசாய் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார், அந்த பெண்ணை கைது செய்தனர். மேலும், அவர் மீது பாரதிய நியாய சன்கிதா சட்டப்பிரிவுகளின் கீழ், ஆபத்தான ஆயுதங்களை கொண்டு காயம் விளைவித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே குற்றம் சாட்டப்பட்ட பெண் திருமணமானவர் என்றும், அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1 More update

Next Story