நிரவ் மோடி விவகாரம்: பஞ்சாப் நே‌ஷனல் வங்கி முன்னாள் இயக்குனர் பணிநீக்கம் - ஓய்வு பெறும் நாளில் அரசு நடவடிக்கை

நிரவ் மோடி விவகாரத்தில், பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் முன்னாள் இயக்குனரை ஓய்வு பெறும் நாளில் பணிநீக்கம் செய்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நிரவ் மோடி விவகாரம்: பஞ்சாப் நே‌ஷனல் வங்கி முன்னாள் இயக்குனர் பணிநீக்கம் - ஓய்வு பெறும் நாளில் அரசு நடவடிக்கை
Published on

புதுடெல்லி,

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டார். இந்த வங்கியில் 2015 ஆகஸ்டு முதல் 2017 மே வரையிலான காலகட்டத்தில் 2 முறை நிர்வாக இயக்குனாக இருந்தவர் உஷா அனந்தசுப்பிரமணியன். பின்னர் இவர் அலகாபாத் வங்கியின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்தார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனராக உஷா அனந்தசுப்பிரமணியன் பதவியில் இருந்தபோது தான், நிரவ் மோடியின் கடன் மோசடி நடந்தது. எனவே இந்த மோசடி தொடர்பாக உஷா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அவரது பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டதால் அலகாபாத் வங்கியின் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன் அவர் விலகினார். எனினும் ஒரு சாதாரண ஊழியராக பணியாற்றி வந்தார். அவர் நேற்றுடன் பணி ஓய்வு பெற இருந்தார்.

ஆனால் பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி தொடர்பாக அவரை மத்திய அரசு நேற்று பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com