ரிபப்ளிக் டிவி விவகாரம்: டிராய்யின் நடவடிக்கைக்கு என் பி ஏ வரவேற்பு

புதிதாக துவங்கப்பட்ட ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு ஆதரவாக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் செயல்பட்டதை டிராய் கண்டித்து எச்சரித்துள்ளது. இதற்கு செய்தி ஒளிபரப்பு நிறுவனங்களின் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
ரிபப்ளிக் டிவி விவகாரம்: டிராய்யின் நடவடிக்கைக்கு என் பி ஏ வரவேற்பு
Published on

புதுடெல்லி

இந்த அமைப்பானது ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தனது டிவி ரேட்டிங்கை உயர்த்திக்கொள்ள அறமற்ற முறையில் ஒளிபரப்பு விநியோகத்தை மேற்கொள்வதாகக் கூறி முறையீடு செய்தது. இந்தச் சேனலை பிரபல மூத்த ஊடகவியலர் அர்னாப் கோஸ்வாமி தலைமையேற்று நடத்தி வருகிறார். ஒரு சேனலை பல்வேறு வகைகளின் கீழ் பட்டியலிட்டு காண்பிப்பது பல ஆபரேட்டர்களின் பழக்கமாக இருந்துள்ளது. பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட வகைகளாக செய்தி மற்றும் அன்றாட நிகழ்வுகள், பொது பொழுதுபோக்கு போன்றவை இடம் பெறுகின்றன. ஒவ்வொரு சேனலும் எந்த வகையிலான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கின்றன என்பதை தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு சேனலுக்கும் எல் சி என் எனப்படும் எண் ஒன்று வழங்கப்படும். இந்த எண்ணின்படி ஒரு சேனலை ஒரு வகையில்தான் சேர்க்க வேண்டும். ஒரு எல் சி என்னைக்கொண்டு பல சேனல்களாக பட்டியலிடக் கூடாது என்பது டிராய் இட்ட விதிமுறையாகும். இதை மீறி கேபிள் ஆபரேட்டர்கள் ரிபப்ளிக் தொலைக்காட்சியை பல வகைகளின் கீழ் பட்டியலிட்டதால் அதன் ரேட்டிங் அதிரடியாக அதிகரித்தது.

இதை எதிர்த்து புகாரளித்தப் பின்னர் தவறு திருத்திகொள்ளப்பட்டுள்ளது. இதனால் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ரேட்டிங் சராசரியாக ஆங்கில சேனல்களுக்கு கிடைக்கும் ரேட்டிங் கிடைத்துள்ளது. அதன் அபரிமிதமான ரேட்டிங்கில் 50 சதவீதம் குறைந்து விட்டதாக இப்போதைய ரேட்டிங் நிலவரம் சுட்டிக்காட்டுகிறது.

இதையடுத்து என் பி ஏ டிராய் அமைப்பிற்கு நன்றி தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com