நேதாஜி மரணம் தொடர்பான முடிவு இறுதியானதல்ல - மத்திய அரசு

மேற்கு வங்கத்திலிருந்து கேட்கப்பட்ட கேள்விக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சகம் நேதாஜி 1945 ஆம் ஆண்டில் இறந்துவிட்டதாக தெரிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தவுடன் அம்முடிவு இறுதியானதல்ல என்று விளக்கம் கொடுத்துள்ளது.
நேதாஜி மரணம் தொடர்பான முடிவு இறுதியானதல்ல - மத்திய அரசு
Published on

புதுடெல்லி

மத்திய அரசின் பதிலுக்கு திரிணமுல் காங்கிரஸ் மட்டுமின்றி பாஜகவின் மேற்கு வங்கப் பிரிவும் கண்டனம் செய்துள்ளது. இதற்கு விடையளித்த மத்திய உள்துறை அதிகாரி 2006 ஆம் ஆண்டில் (காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ அரசினால்) எடுக்கப்பட்ட முடிவின்படியே இப்போது தரப்பட்டுள்ள பதில் அமைந்துள்ளது. இருப்பினும் இந்த விஷயம் முடிந்துவிடவில்லை. இது தொடர்பாக ஏதேனும் புதிய உண்மைகள் வெளிவந்தால், அரசு தகுதியின் அடிப்படையில் அதனை ஆராய்ந்து தக்க முடிவினை எடுக்கும் என்றார்.

கேள்வி எழுப்பிய கொல்கத்தா நபருக்கு தனியே கூடுதல் தகவல் அளிக்கப்படும் என்று அவர் கூறினார். முகர்ஜி ஆணையம் நேதாஜி 1897 ஆம் ஆண்டில் பிறந்தவர் என்பதால் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று 2006 ஆம் ஆண்டில் முடிவெடுத்தது. அதற்கு முன்பு மத்திய அரசு இருமுறை 1956 ஷா நவாஸ் ஆணையம் மற்றும் கோஸ்லா ஆணையம் 1970-74 ஆகிய வருடங்களில் கொடுத்த அறிக்கைகளை ஏற்கவில்லை.

மத்திய அரசின் இந்த ஒருதலைப்பட்சமான முடிவு தனக்கு அதிர்ச்சியளிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா தெரிவித்தார். மாநில பாஜக தலைவரும், நேதாஜியின் கொள்ளுப்பேரனுமாகிய சந்திர போஸ், நேதாஜி மறைவு பற்றி சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து கண்டறிய வேண்டும் என்று கோரியுள்ளார். உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் இப்படியொரு பதிலை அளித்த அதிகாரி மீது உடனடியாக

நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

நேதாஜி நிறுவிய ஃபார்வேர்டு பிளாக் கட்சி அரசு அதன் நிறுவுனர் 1945 ஆம் ஆண்டு விமான விபத்தில் இறந்தார் என்பதன் மூலம் தவறான வழியில் நாட்டை திசைதிருப்புவதாக குற்றஞ்சாட்டியது.

காங்கிரஸ் கட்சியோ பாஜக அரசு வரலாற்றை திருத்தி எழுத கருத்தொருமித்த வகையில் முயற்சிப்பதாக கூறியது. நேதாஜியின் மரணம் தொடர்பாக புதிய சர்ச்சையை அது கிளப்பியுள்ளது; இதற்காக அக்கட்சி மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com