மாநிலங்களிடம் 2 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: மத்திய அரசு தகவல்

மாநிலங்களிடம் 2 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் தற்போது மாநிலங்கள் வசம் ஏறத்தாழ 2 கோடி தடுப்பூசிகள் கையிருப்பாக உள்ளன. அடுத்த 3 நாளில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 26 லட்சம் தடுப்பூசி வழங்கப்பட்டு விடும். இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை தடுப்பூசி திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசால் 21 கோடியே 7 லட்சத்து 31 ஆயிரத்து 130 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 19 கோடியே 9 லட்சத்து 60 ஆயிரத்து 575 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com