சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து விவாதம் நடத்த வேண்டும்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி

எதிர்கட்சி எம்.பிக்களின் தொடர் அமளியால் அவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து விவாதம் நடத்த வேண்டும்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி
Published on

ஈரான் - அமெரிக்கா போரால் இந்தியா சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.வணிக சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டு இருப்பதால் ஓட்டல்களில் நிலமையை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. நாட்டில் நிலவும் சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இன்று காலை மக்களவை கூடியதும் இதே விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. கேள்வி நேரத்தில் அவையில் இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று சபாநாயகர் கோரிக்கை விடுத்தார். எனினும், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அவையை பிற்பகல் 2 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

அவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட எம்பிக்கள் குறித்து பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, உறுப்பினர்களின் செயல்பாடு அவை எதிர்பார்க்கும் கண்ணியத்திற்கு ஏற்றதாக இல்லை. தங்களுக்கு உரிய வாய்ப்புகள் தரப்படுவது இல்லை என்று எதிர்க்கட்சிகள் அடிக்கடி குற்றம் சாட்டும் நிலையில், கேள்வி நேரத்தில் அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறார்கள்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com