நீட் கேள்வி எண் 19 - டெல்லி ஐஐடி குழு அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

நீட் தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி இடம்பெற்றிருந்தது குறித்து டெல்லி ஐஐடி நாளை நண்பகலுக்குள் அறிக்கை அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீட் கேள்வி எண் 19 - டெல்லி ஐஐடி குழு அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் ரத்து உள்ளிட்ட வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. நீட் தேர்வில் 19வது கேள்விக்கு இரண்டு விடைகள் சரியானவை என கருதி கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதை எதிர்த்து விவாதம் நடைபெற்றது. இதில் சரியான விடையை கண்டறிய 3 நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க டெல்லி ஐஐடி இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் நடந்து முடிந்த நீட் தேர்வில் கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்விக்கான பதிலை, டெல்லி ஐஐடி இயக்குநர் நாளை பகல் 12 மணிக்குள் சுப்ரீம் கோர்ட்டு பதிவாளரிடம் வழங்க தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. நீட் கேள்வி எண் 19 தொடர்பான வழக்கு விசாரணை நாளையும் நடைபெற உள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com