

புதுடெல்லி,
மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு கடந்த மாதம் 3-ந் தேதி நடைபெற்றது. இந்த 'நீட்' தேர்வில் வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டு, 21-ந் தேதி நீட் மறுதேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு கசிவு விவகாரம் தொடர்பாக டெலி கிராம் செயலியை மத்திய அரசு தற்காலி கமாக தடை செய்து உள்ளது.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "மோடி அரசுக்கு வினாத்தாள் கசிவுகளை தடுக்கும் எண்ணம் துளியும் இல்லை. அதனால்தான் ராணுவ விமானங்கள் மூலம் வினாத்தாள்களை கொண்டு செல்வது, டெலிகிராமை முடக்கு வது போன்ற அபத்தமான நடவடிக்கைகள் எடுக்கிறது.
இந்த நடவடிக்கைகள் ஆவண கசிவுகளை தடுக்குமா?. வினாத்தாள் கசிவு வியாபாரம் என்பது பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி பணம் மேலிடம் வரை செல்கிறது. வினாத்தாள் கசிவை நிறுத்தி னால், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை வாங்க பணம் எங்கிருந்து வரும்?" என கூறியுள்ளார்.