

புதுடெல்லி,
நாடு முழுவதும் கடந்த 3-ந்தேதி நடந்த நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணையும் நடந்து வருகிறது. இதனிடையே நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஐதராபாத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஏராளமான மாணவர்கள், பிரதமர் மோடி மற்றும் கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்ட வீடியோவை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரி வித்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
“லட்சக்கணக்கான இளைஞர்கள் வீதிகளில் இறங்கியிருக்கும்போதும், 22 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்கு றியாக இருக்கும்போதும் பிரதமர் மவுனம் காத்தால், அரசு பதிலளிப்பதில் கவனம் செலுத்தாமல், தப்பிப்பதில் மும்முரமாக இருக்கிறது.
தர்மேந்திர பிரதான் பதவி விலகி, நீட் உள்ளிட்ட தேர்வுகளில் வினாத்தாள் கசிவுகளைத் தடுக்க ஒரு குறைபாடற்ற அமைப்பு நிறுவப்படும் வரை, நாங்கள் ஓய மாட்டோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.