நேபாள வெள்ளப்பெருக்கு: உத்தரபிரதேசம், பீகாரில் உஷார் நிலை

பேரிடரை எதிர்கொள்வதற்காக 20 பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
நேபாள வெள்ளப்பெருக்கு: உத்தரபிரதேசம், பீகாரில் உஷார் நிலை
Published on

புதுடெல்லி,

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இந்திய எல்லையில் இருந்து சுமார் 160 கி.மீ. தொலைவில் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள திரிசூலி நதியில் ஏற்பட்ட இந்த பெருவெள்ளம் இந்தியாவின் உத்தரபிரதேசம், பீகார் வழியாக பாயும் கண்டக் ஆற்றிலும் கரைபுரளும் என அஞ்சப்படுகிறது.

எனவே நேபாளத்தை ஒட்டிய உத்தரபிரதேசம் மற்றும் பீகார் எல்லைப்பகுதிகளில் கடும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கண்டக் ஆற்று கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மேலும் இந்த மாநிலங்களில் எந்தவித பேரிடரையும் எதிர்கொள்வதற்காக 20 பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்பட்டால், அவசர தேவைகளுக்காக கூடுதல் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு உள்ளூர் நிர்வாகங்களை முடுக்கி விடப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com