

காத்மாண்டு,
நேபாளத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல நீர்மின் நிலையங்கள் கடுமையான சேதமடைந்தன. எனினும், இந்த சவால்களை முறியடித்து, கடந்த செப்டம்பர் மாத பாதியில் இருந்து இந்த மாதம் பாதி வரையிலான ஒரே மாதத்தில் இந்தியாவுக்கு ரூ.327 கோடி மதிப்பிலான மின்சாரத்தை நேபாளம் வழங்கியுள்ளது.
இதுகுறித்து நேபாள மின்சார வாரியத்தின் நிர்வாக இயக்குனர் தீர்காயு குமார் ஸ்ரேஸ்தா கூறுகையில், "இந்த காலகட்டத்தில் 63.39 கோடி யூனிட் மின்சாரம் இந்தியாவுக்கு வெற்றிகரமாக வினியோகிக்கப்பட்டு, நேபாள நாட்டு நாணய மதிப்பில் 5.925 பில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதி இருதரப்பு மின் விற்பனை ஒப்பந்தங்களின் கீழ் வழங்கப்பட்டது" என்றார்.