

புதுடெல்லி,
இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய செயல் இயக்குனராக ஜோஸ் ஜே. கட்டூர் என்பவரை நியமனம் செய்து உள்ளது. இந்த உத்தரவு கடந்த 4ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என தெரிவித்து உள்ளது.
அவர் இந்த பதவிக்கு நியமனம் செய்யப்படுவதற்கு முன்பு வரை, கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகத்தில் அதன் மண்டல இயக்குனராக பதவி வகித்து வந்துள்ளார்.
அவர் ரிசர்வ் வங்கியில் 30 ஆண்டுகளாக தொலைதொடர்பு, மனிதவள மேலாண்மை, நிதி, கண்காணிப்பு, கரன்சி மேலாண்மை மற்றும் பிற துறைகளில் சேவையாற்றி வந்துள்ளார்.