அடுத்த ஐந்தாண்டுகள் நாட்டிற்கு முக்கியமானவை - பிரதமர்

அடுத்த ஐந்தாண்டுகள் நாட்டிற்கு முக்கியமானவை என்றார் பிரதமர் மோடி.
அடுத்த ஐந்தாண்டுகள் நாட்டிற்கு முக்கியமானவை - பிரதமர்
Published on

புதுடெல்லி

அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் குடியரசுத் தலைமர், துணைத் தலைவர் ஆகிய இருவரும் பாஜகவிலிருந்து தேர்வு செய்யப்பட்டிருப்பார்கள். நாளை துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே பிரதமர் பேசினார். அந்நிகழ்ச்சியில் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் வெங்கய்யா நாயுடு எழுதிய புத்தகத்தையும் வெளியிட்டார். இரு பாகங்கள் அடங்கிய இப்புத்தகம் வெங்கய்யா நாயுடுவின் எழுத்துக்கள் மற்றும் பேச்சுக்களின் தொகுதியாகும்.

மக்களவையில் 30 ஆண்டுகள் கழித்து ஒரு கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது; 2022 ஆம் ஆண்டை இலக்காக வைத்து கணிசமான செயல்பாடுகளை தேச வளர்ச்சிக்காக பங்களிக்க இது உதவும் என்று குறிப்பிட்டார் பிரதமர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அதனை சிறப்பான முறையில் செயல்பட வைக்க வேண்டியத் தேவையுள்ளது என்றார் மோடி. அதிர்ஷ்டவசமாக வெங்கய்யா நாயுடு மாநிலங்களவையை வழிநடத்தப் போகிறார். அவருக்கு நமது ஆதரவு பாறை போன்று உறுதியுடன் இருக்க வேண்டும் என்றார் மோடி.

விழாவில் அருண் ஜெட்லி, அமித் ஷா ஆகியோரும் பங்கு பெற்றனர். மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் பிரதமர் வெங்கய்யா நாயுடுவை தேர்வு செய்ததன் மூலம் நல்லதொரு வேட்பாளரை தேர்வு செய்துள்ளார் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com