டெல்லி கார் வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது


டெல்லி கார் வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது
x

கைது செய்யப்பட்ட நபர் ஜம்மு காஷ்மீர் சோபியனை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த மாதம் 10-ந் தேதி நடந்த கார் வெடித்து சிதறியதில் 15 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். பயங்கரவாத தாக்குதல்போல தெரிந்ததால் தேசிய புலனாய்வு முகமையினர் விசாரணைக்கு எடுத்தனர். அது திட்டமிட்ட தற்கொலைப்படை தாக்குதல் என்றும், டாக்டர் உமர் என்ற பயங்கரவாதி காரை வெடிக்கச் செய்ததும் தெரியவந்தது. இந்த வழக்கில் இதுவரை 8 பேரை கைது செய்து இருந்தனர்.

இந்த நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் யாசிர் அகமது தார் என்பதாகும். இவர் ஜம்மு காஷ்மீர் சோபியனை சேர்ந்தவர். கார் வெடிப்பு சம்பவத்தில் பலியான பயங்கரவாதி டாக்டர் உமர் முகமது உடன் மிகவும் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார்.

இதன் அடிப்படையில் அதிகாரிகள் அவரை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்கிதா ஆகியவற்றின் விதிகளின் கீழ் கைது செய்தனர். இவரை அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வருகிற 26 - ந் தேதி வரை காவல் விசாரணைக்கு எடுத்தனர். இந்த வழக்கில் இவரோடு சேர்த்து கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

1 More update

Next Story