கொரோனா நோயாளி மரணம்: நீரா ராடியா உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு

கொரோனா நோயாளியின் மரணம் பற்றிய புகார் எதிரொலியாக, நீரா ராடியா உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மதுரா,

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மேல்மட்டத்தில் பணிகளை முடித்து கொடுப்பவராக இருந்தவர் நீரா ராடியா. இந்த பெண்மணியின் தொலைபேசி உரையாடல் அடங்கிய டேப்கள், கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, மந்திரிகள் நியமனம் போன்ற முக்கிய முடிவுகளில் அவரது பங்கு இருப்பது தெரியவந்தது.

தற்போது, நயாதி ஹெல்த்கேர் என்ற ஆஸ்பத்திரி குழுமத்தின் தலைவராக நீரா ராடியா இருக்கிறார். உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள இந்த குழுமத்தை சேர்ந்த ஆஸ்பத்திரியில், கடந்த ஆண்டு கொரோனாவுக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகு உயிரிழந்தார். ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் அலட்சியத்தால்தான் தனது கணவர் இறந்ததாக அவருடைய மனைவி பகவதி வர்மா, போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், நீரா ராடியா உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணை நடந்து வருவதாகவும், விரைவில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com