மோடி, அமித்ஷாவுக்கு நிதிஷ் குமார் வாழ்த்து, ராகுல் காந்திக்கு சரத் யாதவ் வாழ்த்து

குஜராத், இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு நிதிஷ் குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மோடி, அமித்ஷாவுக்கு நிதிஷ் குமார் வாழ்த்து, ராகுல் காந்திக்கு சரத் யாதவ் வாழ்த்து
Published on

பாட்னா,

குஜராத், இமாச்சலபிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ளது. பாரதீய ஜனதா வெற்றி பெற்றுள்ளதையடுத்து, பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேவேளையில், நிதிஷ்குமாருடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டால், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து வெளியேறியுள்ள சரத் யாதவ், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். குஜராத்தில் பாரதீய ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றுவோம் என்று கூறிய காங்கிரஸ், இமாச்சல பிரதேத்தில் ஆட்சியை பறிகொடுத்துள்ளதுஎன்று தெரிவித்துள்ளார்.

ஐக்கிய ஜனதா தளம் அதிருப்தி தலைவராக உள்ள சரத் யாதவ், ராகுல் காந்தியை பாராட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், குஜராத் தேர்தலில் காங்கிரஸ் தனது எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. காங்கிரஸ் செய்துள்ள மிகப்பெரிய சாதனையான இது, திருப்தி அளிக்க கூடிய விஷயம் ஆகும். இடைவிடாத இந்த முயற்சிக்காக ராகுல் காந்திக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சரத்யாதவ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அதிருப்தி அணி, குஜராத் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து 4 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், இரண்டு தொகுதிகளில் சரத் யாதவ் அணி வெற்றி பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com