

ஸ்ரீநகர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. இன்று அங்கு மழை பொழிவும் உள்ளது. இந்த நிலையில், பனிப்பொழிவால் ஏற்பட்ட தெளிவற்ற வானிலையால் ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று பல விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்றும் இங்கு எந்த விமானமும் இயக்கப்படவில்லை. இதுபற்றி விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, பனிப்பொழிவால் ஏற்பட்ட தெளிவற்ற வானிலையானது விமான சேவையை பாதித்துள்ளது.
விமான நிலையத்தில் இன்று காலை முதல் எந்த விமானமும் வந்திறங்கவோ அல்லது கிளம்பி செல்லவோ முடியவில்லை. காலை 11 மணியளவில் ஆய்வு செய்து அதன்பின்பே விமான இயக்கம் பற்றி முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.