2,000 ரூபாய் நோட்டு மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு இல்லை - மத்திய அரசு உறுதி

2,000 ரூபாய் நோட்டு மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு இல்லை என்று மத்திய அரசு உறுதிபட தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக கடந்த மே 19-ந்தேதி அறிவித்த ரிசர்வ் வங்கி, இந்த நோட்டுகளை செப்டம்பர் 30-ந்தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தி இருந்தது.இந்த காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படுமா? என மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி எழுத்து மூலம் பதிலளித்தார்.

அதில் அவர், 'தற்போதைய நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு குறித்த பரிசீலனை எதுவும் அரசிடம் இல்லை' என தெரிவித்தார்.

2,000 ரூபாய் நோட்டுகளைப்போல உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் திட்டம் எதுவும் அரசிடம் உள்ளதா? என்ற கேள்விக்கும், இல்லை என அவர் பதிலளித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com