கேபினட் கூட்டத்தில் தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து விவாதிக்கப்படவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நீட் முறைகேட்டால் நாட்டின் கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
 ராகுல் காந்தி
Published on

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை வேறு அமைச்சகத்துக்கு மாற்றுவது மட்டும் போதாது, அவரை அமைச்சர் பதவியில் இருந்து முழுமையாக நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது: "தர்மேந்திர பிரதானை வேறு துறைக்கு மாற்றப் போவதாக தகவல்கள் வெளியாகின்றன.

ஆனால் அது பிரச்சினைக்கு தீர்வாகாது. மாணவர்கள் கோருவது பதவி நீக்கம். எனவே அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். நீட் முறைகேட்டால் நாட்டின் கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மாணவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் முக்கிய கோரிக்கையாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு கூடுதல் அவகாசம் கேட்டுள்ள நிலையில், போராட்டக்காரர்கள் தங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று தெரிவித்துள்ளனர். இன்று 3 வது கட்டமாக மத்திய அரசு - கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இடையே பொரோட்டம் நடைபெற உள்ளது. தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யாவிட்டால் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என்று இளைஞர்கள் தெரிவித்து உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com