நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடோ, விலை உயர்வோ இல்லை: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்

பெட்ரோல் பம்புகளுக்கு வினியோகம் செய்யும் முனையங்களிலும் போதிய இருப்பு உள்ளது என்றார்.
நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடோ, விலை உயர்வோ இல்லை:  மத்திய பெட்ரோலிய அமைச்சகம்
Published on

புதுடெல்லி

டெல்லியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, நாம் ஆண்டுக்கு 26 கோடி டன் கச்சா எண்ணெய்யை சுத்திகரிக்கும் திறன் பெற்றிருக்கிறோம் என நாட்டு மக்களுக்கு நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

கடந்த 2 நாட்களாக, பல இடங்களில் சில்லரை விற்பனை கடைகளிலும், பெட்ரோல் பம்புகளிலும் மக்கள் அச்சத்துடன் பெட்ரோல், டீசலை நீண்ட வரிசையில் நின்று வாங்கி செல்கின்றனர். நம்மிடம் போதிய அளவுக்கு பெட்ரோல், டீசல் உள்ளது. பெட்ரோல் பம்ப் எதிலும் பற்றாக்குறை இல்லை. பெட்ரோல் பம்புகளுக்கு வினியோகம் செய்யும் முனையங்களிலும் போதிய இருப்பு உள்ளது.

Also Read
அமெரிக்கா, ஈரான் இடையே எந்த பேச்சுவார்த்தையும் இல்லை: பாகிஸ்தானுக்கான ஈரான் தூதர்
நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடோ, விலை உயர்வோ இல்லை:  மத்திய பெட்ரோலிய அமைச்சகம்

அதனால், வதந்திகளை நம்ப வேண்டாம். பயந்து போய் எரிபொருள் வாங்க வேண்டாம். நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பும் இல்லை என்றும் உங்களுக்கு தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com