பிரதமர் மோடி மீது 4 அணாக்கள் மதிப்பிலான ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை: மத்திய மந்திரி அமித்ஷா

உங்களுக்கு 10 ஆண்டுகள் வரை வாய்ப்பு தரப்பட்டது. நீங்கள், ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு ஊழலில் ஈடுபட்டீர்கள் என்றார்.
அமித்ஷா
Published on: 

புனே

12 ஆண்டுகளில், 4 அணாக்கள் மதிப்பிலான ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட பிரதமர் மோடிக்கு எதிராக கூறப்படவில்லை என மத்திய மந்திரி அமித்ஷா கூறினார்.

மராட்டியத்தின் புனே நகரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.

அவர் பேசும்போது, தொடர்ந்து 3 மக்களவை தேர்தல்களில் தோல்வியை தழுவிய பின்னர், காங்கிரஸ் கட்சி அதனுடைய ஏமாற்றங்களை பல்வேறு வழிகளில் வெளியிட்டு வருகிறது. தேர்தல்களில் போட்டியிடுவது, தோல்வியடைவது மற்றும் வெற்றி பெறுவது என்பது கட்சி தலைவர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் நடப்பது ஆகும்.

10 ஆண்டுகள்

உங்களுக்கு 10 ஆண்டுகள் வரை வாய்ப்பு தரப்பட்டது. நீங்கள், ஊழல்கள் செய்தீர்கள். ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு ஊழலில் ஈடுபட்டீர்கள். நாட்டு மக்கள் உங்கள் கைகளை பிடித்து, அரசில் இருந்து தூக்கி எறிந்து விட்டார்கள். மோடியை பிரதமராக்கி விட்டார்கள்.

இந்த 12 ஆண்டுகளில், 4 அணாக்கள் மதிப்பிலான ஊழல் குற்றச்சாட்டு ஒன்று கூட பிரதமர் மோடிக்கு எதிராக கூறப்படவில்லை என்று கூறினார்.

X