இனி 30 நாட்களுக்கு ரீசார்ஜ் - புதிய விதிமுறைகள் வெளியிட்ட டிராய்

இதுவரை ஒரு ஆண்டில் 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை மாறி, 12 ரீசார்ஜ்கள் மட்டுமே போதுமானதாக இருக்கும்.
இனி 30 நாட்களுக்கு ரீசார்ஜ் - புதிய விதிமுறைகள் வெளியிட்ட டிராய்
Published on: 

புதுடெல்லி,

மொபைல் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய நிவாரணம் அளிக்கும் வகையில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI புதிய தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதுவரை வழங்கி வந்த 28 நாள் செல்லுபடியாகும் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களுக்கு பதிலாக, இனி கட்டாயமாக 30 நாள் செல்லுபடியாகும் திட்டங்களை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

12 ரீசார்ஜ்கள்

இந்த மாற்றத்தின் மூலம், இதுவரை ஒரு ஆண்டில் 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை மாறி, 12 ரீசார்ஜ்கள் மட்டுமே போதுமானதாக இருக்கும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் செலவு மற்றும் சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இணையதள (டேட்டா) வசதி தேவையில்லாத பயனர்களுக்காக குறைந்த கட்டணத்தில் குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் வசதி மட்டும் கொண்ட சிறப்பு திட்டங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் TRAI தெரிவித்துள்ளது.

புதிய விதிமுறை

அதேபோல், மாதந்தோறும் ஒரே தேதியில் ரீசார்ஜ் புதுப்பிக்கும் வசதியையும் அனைத்து நிறுவனங்களும் வழங்க வேண்டும் என்று புதிய விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரே நாளில் தங்களது ரீசார்ஜை எளிதாக புதுப்பிக்க முடியும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com