இந்தியாவில் உள்ள அணு உலைகளை அகற்ற வேண்டும் - மாநிலங்களவையில் வைகோ கோரிக்கை

இந்தியாவில் உள்ள அணு உலைகளை அகற்ற வேண்டும் என மாநிலங்களவையில் வைகோ கோரிக்கை விடுத்தார்.
இந்தியாவில் உள்ள அணு உலைகளை அகற்ற வேண்டும் - மாநிலங்களவையில் வைகோ கோரிக்கை
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பூஜ்ய நேரத்தில், கூடங்குளம் அணு உலை தொடர்பாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கூடங்குளம் அணு உலையை எதிர்த்து இடிந்தகரை என்ற கிராமத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள், குறிப்பாக பெண்கள் கடந்த 2 ஆண்டுகளாக அறவழிப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், ஏற்கனவே காயம்பட்ட புண்ணில் உப்பைத் தடவுவது போல அதே கூடங்குளத்தில் அணு உலை பூங்கா அமைக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

இப்போது கூடங்குளத்தில் அணுக் கழிவுகளைக் கொட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு இருப்பது திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை அழித்துவிடும். இப்போது எத்தனையோ வழிகளில் புதுப்பிக்கத்தக்க மின் விசை பெறக்கூடிய கண்டுபிடிப்புகள் வந்துவிட்டன. சூரிய ஒளியில் இருந்தும், காற்றில் இருந்தும், கடல் அலையில் இருந்தும் மின்சாரம் பெற்றுக்கொண்டு இருக்கின்றோம். எனவே இந்தியாவில் உள்ள அணு உலைகளை மூட வேண்டும். இனி புதிய அணு உலைகள் அமைக்க கூடாது என்று அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ பேசினார்.

இதற்கிடையே டெல்லியில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை, வைகோ நேரில் சந்தித்து பேசினார். மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com