டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஆபாச நடனம்; ஐகோர்ட்டு கண்டனம்

டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டு வளாகத்தில் ஹோலி கொண்டாட்டத்தின்போது இளம்பெண் ஆபாச நடனம் ஆடியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஆபாச நடனம்; ஐகோர்ட்டு கண்டனம்
Published on

புதுடெல்லி,

டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டு வளாகத்தில் புதுடெல்லி வழக்கறிஞர் கூட்டமைப்பு (என்.டி.பி.ஏ.) சார்பில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அப்போது பாலிவுட் படங்களில் இடம் பெற்ற பாடல்களுக்கு இளம்பெண்கள் ஆபாச நடனம் ஆடியுள்ளனர். கோர்ட்டு வளாகத்தில் இதுபோன்ற கவர்ச்சி நடனம் ஆடியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலானது. அதில், நடனத்தின் பின்னணியில் என்.டி.பி.ஏ.வின் போஸ்டர் ஒன்றும் இடம் பெற்று உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு டெல்லி ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

கோர்ட்டு வளாகத்தில் நடந்த நடன நிகழ்ச்சி முறையற்றது என தெரிவித்ததுடன், சட்ட தொழிலுக்கான உயர்ந்த நன்னெறி மற்றும் அறநெறிக்கான தரநிலைகளை இந்த நிகழ்ச்சி கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவித்து உள்ளது.

நீதிமன்ற அமைப்பு பற்றிய எண்ணம் கிழித்தெறியப்பட்டு உள்ளது என்றும் டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது. இதுபற்றி விளக்கம் கேட்டு என்.டி.பி.ஏ.வுக்கு நோட்டீஸ் ஒன்றும் அனுப்பப்படும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com